சென்னை,
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய ராதாபுரம் தொகுதி அதிமுக உறுப்பினர் இன்பத்துறை,“ கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்நிலை தொடரவில்லை. எனவே, நிலம் கொடுத்த உள்ளூர் மக்களுக்கு வேலை வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி,“ கூடங்குளம் அணுமின் நிலையம் துவங்கும் போது அதற்கு நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கப்படும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்டது. இந்த நிறுவனம் முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.  தற்போது அந்த நிறுவனத்தில் உள்ளூரைச் சேர்ந்த சிலருக்கு வேலை வழங்கப் பட்டுள்ளது. மேலும், இரு பிரிவுகளாக தேர்வும் நடத்தப்பட்டுள்ளது. நிலம் கொடுத்த அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பதுதான் மாநில அரசின் நிலைப்பாடு. இதுகுறித்து மத்திய அரசின் கவனத்துக்கொண்டு சென்று உள்ளூர் மக்களுக்கு வேலை பெற்றுத்தரப்படும். அணுமின்நிலையத்துக்கு நிலம் கொடுத்த வாரிசுகளுக்கு வேலை வழங்கக் கோரி இம்மாத 16ஆம் தேதி எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு எட்டப்படும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: