திருப்பூர்,
திருப்பூரில் தம்பதியினர் தற்கொலை செய்து கொள்ளுவதற்கு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் பெருந்தொழுவு கவுண்டம்பாளையம் பல்லகாட்டுத் தோட்டத்தை சேர்ந்த தம்பதினர் ஜெயந்தி, நடராஜன் ஆகியோர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு ஆட்சியரிடம் மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் கந்து கும்பலிடம் பணம் கடன் வாங்கியிருந்தோம். இந்நிலையில், எங்கள் வீட்டினுள் புகுந்த கந்துவட்டி கும்பல் ரூ. 7 லட்சம், 37 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருட்களை மூன்று கார்களில் வந்து எடுத்து சென்றுவிட்டனர். எனவே, அவிநாசிபாளையம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் தற்கொலை செய்து கொள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

மயானத்தை மீட்க மனுதிருப்பூர், குன்னத்தூர் அடுத்த காவுத்தம்பாளையம் கிராமம் கிழக்கு தச்சம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் அளித்த மனு கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் உள்ள மயானத்தை ஐந்து தலைமுறைகளாக பயன்படுத்தி வருகின்றோம். தற்போது அதன் அருகில் தனிநபர் ஒருவர் காலி இடத்தை விலைக்கு வாங்கி உள்ளார். மயானத்தின் ஒரு பகுதியை தன்னுடைய இடத்தோடு இணைத்து கொண்டுள்ளார். இதனால் மயானத்தை பயன்படுத்த முடியமால் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பு செய்த மயானத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.