சென்னை,
தமிழக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்சனை குறித்து அரசின் கவனத் திற்கு கொண்டு வந்த திமுக உறுப்பினர் ஐ. பெரியசாமி,“ திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், ஆத்தூர் தொகுதிகளில் குடிநீர் பிரச் சனை அதிகரித்துள்ளது என்றும் கடந்த 2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்டம் இதுவரைக்கும் செயல்பாட்டுக்கு வரவில்லை.  இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,“திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமானதால் ஐந்து நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வழங்கப் பட்டது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு வேடசந்தூர் கூட்டு குடிநீர் திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம், நத்தம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது நடந்து வரும் குடிநீர் திட்டப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 31 ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்” என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.