பட்னா,

பீகார் மாநிலத்தில் ஜாமுஐ இல் உள்ள சிக்கண்டிர பிரிவு  பகுதியை சார்ந்தவர்  வால்மீகி யாதவ்.   இவர் ஞாயிறன்று  தனது நண்பர் கரு யாதவ்வுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் வால்மீகி யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  மேலும் அவரது நண்பர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சில நாட்களுக்கு முன் இவர் தகவல் அறியும் சட்டத்தின்கீழ்   பஞ்சாயத்து திட்டங்களுக்காக நடைபெற்ற அங்கன்வாடி செவிகா தேர்வில் தேர்வு செய்யப்பட்ட விபரம் குறித்து தகவல் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். இந்த தேர்வில் முறைகேடு நடந்து அதன் படியே பதவிகள் நிரப்பப்பட்டிருக்கிறது என பல்வேறு புகார்கள் எழுந்து வந்தன. மேலும் வால்மீகியாதவின் மனைவிவும் நன்றாக தேர்வு எழுதியும் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு காரணம் இந்த தேர்வில் நடைபெற்றிருக்கும் முறைகேடே ஆகும் என்று கருதி வந்திருக்கிறார். இதனை எப்படியாவது வெளிக்கொண்டு வரும் நோக்கில் இதுகுறித்த கதவல்களை சேகரித்து வந்திருக்கிறார். இதுவே இந்த கொலைக்கு காரணம் என தற்போது தெரிய வந்திருக்கிறது.

பீகாரில் கடந்த மூன்று மாதங்களில் மூன்று சமுக ஆர்வலர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொலை செய்யப்பட்டுள்ள வால்மீகி யாதவ் பல்வேறு மோசடிகளை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வெளிக்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: