சேலம்,ஜீலை 02-
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெற வலியுறுத்தி சேலம் ஜங்சன் தபால் நிலையம் முன் அனைத்து கட்சி சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை பாதுகாக்க தொடர்ச்சியாக 1955 ல் ஏற்படுத்தப்பட்ட தீண்டாமை ஒழிப்பு சட்டம், 1975ல் உருவாக்கப்பட்ட குடிமைஉரிமைகள் பாதுகாப்பு சட்டம், பட்டியலின பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம், 2016ல் பட்டியலின
பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்ற சட்டங்களை உருவானது. இந்த சட்டங்களை சீர்குழைக்க தற்போது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் முழுமையாக திரும்ப பெற மத்திய மாநில அரசுகள் உணர்வுப் பூர்வமாக நடவடிக்கை மேற்கொண்டு அவசர சட்டம் ஏற்படுத்தி  வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டத்தின் பிரிவுகளை அரசியலமைப்பு சட்டத்தில் 9வது அட்டவணையில் இனைக்க வேண்டும். வன்கொடுமை வழக்குகளை உரிய வேகத்தில் முடிக்க நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் வழக்குரைஞர்கள் நியமனத்தின் வாயிலாக உறுதி செய்ய வேண்டும் என சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பனர் ஆர்.குழந்தைவேல் தலைமையில்நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி, தந்தை பெரியார் திராவிர் கழக மாநில தலைவர் கொளத்தூர் மணி,
விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி பார்த்திபன், அம்பேத்கார் மக்கள் இயக்க மாநில இளைஞர் அணி செயலாளர் அண்ணாதுரை, ஆதி தமிழர் பேரவை நிர்வாகி உதயபிரகாசம், தீண்டீமை ஒழிப்பு முன்னணி தலைவர் எ.கலியப்பெருமாள், அம்பேத்கார் இந்திய குடியரசு மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், பிரகாஷ் அம்பேத்கார் குடியரசு கட்சி மாவட்ட செயலாளர் வி.எம்.கே.பாலு உள்ளிட்டு அனைத்து கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Leave a Reply

You must be logged in to post a comment.