சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் திங்களன்று (ஜூலை 2) உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.

அதில் கலந்து கொண்டு பேசிய திமுக உறுப்பினர் ராஜேந்திரன், ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களும் அனைவருக்கும் அனைத்து நாட்களிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப் புறங்களில் கூடுதல் மண் ணெண்ணெய் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். கூட்டுறவு துறை சார்பில் நடத்தப்படும் காமதேனு, அமுதம், சிந்தாமணி அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலைகளில் ஒவ்வொரு கடைகளிலும் வித்தியாசப் படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அனைவருக்கும் அனைத்து பொருட்களும் அனைத்து நாட்களிலும் ரேசன் கடைகளில் வழங்கி வருவதாக கூறினார். தமிழ்நாட்டுக்கு ஆரம்ப காலத்தில் 54 ஆயிரம்கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப் பட்டது. தற்போது, 16,148 கிலோ லிட்டர் மட்டுமே மத்திய அரசு வழங்கி வருகிறது. அதை பகிர்ந்து அளித்து வருகிறோம். கூடுதலாக மண்ணெண் ணெய்யை வழங்க வேண்டும்என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநில முழுமைக்கும் 22 கடைகள் உள்ளன. அதில் 19 சென்னையிலும் 3 கடலூரிலும் உள்ளன. இந்நிறுவனம் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. ஒவ் வொரு கடையிலும் ஒவ்வொரு பிராண்ட் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதனால்தான் விலையில் வித்தியாசம் உள்ளது என் றும் அமைச்சர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.