புதுச்சேரி,
புதுச்சேரி அரசின் 2018-19 ஆண்டிற்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய முதலமைச்சர், “ 2018 – 19ம் ஆண்டுக்கான மாநிலத் திட்டக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மொத்த வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடு ரூ. 7, 530 கோடி ஆகும். இதில் மாநில நிதிஆதாரங்கள் ரூ.4570 கோடியாகவும் (61 விழுக் காடு), மத்திய அரசின் நிதி உதவி ரூ.1476 கோடியாகவும் (25 விழுக்காடு) இருக்கும் என கணக்கிடப்பட்டுள் ளது” என்றார்.மத்திய நிதியுதவி திட்டங்களின் கீழ் ரூ.409 கோடியும், மீதமுள்ள ரூ.1050 கோடி 14 சதவீதம் வெளிச்சந்தை கடன் மற்றும் மத்திய நிதி நிறுவனங்களின் மூலம் திரட்டப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

புதுச்சேரி அரசின் கீழ் உள்ள 12 பொதுத்துறை நிறுவனங்களில் சாராய ஆலை,மின் விசைக்கழகம் ஆகிய இரண்டையும் தவிர மீதமுள்ள நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கி வருகின்றன. இதுவரை சுமார் ரூ. 600 கோடி வரை நஷ்டம் ஏற் பட்டுள்ளது. இவைகளை மேம்படுத்த வழிவகைகளை ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை அளிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயனின் குழு அமைக்கப்பட்டது. அவர் அளித்த அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார். இதனைத்தொடர்ந்து கூட்டம் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் ஜூலை 27வரை பட்ஜெட் கூட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

வெளிநடப்பு:
முன்னதாக, எதிர்க் கட்சி தலைவர் என். ரங்கசாமி தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். அதிமுக உறுப்பினர்கள் அக் கட்சியின் சட்டமன்றகுழுத் தலைவர் அன்பழகன் தலைமையில் கருப்பு சட்டடை அணிந்து வந்தனர். பிறகு வெளிநடப்பு செய்து பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: