தாராபுரம்,
தாராபுரம் அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தாராபுரம் அடுத்துள்ள கொக்கம்பாளையம் ஊராட்சி, கரைப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், சார் ஆட்சியர் கிரேஸ் பச்சுவாவிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கொக்கம்பாளையம் ஊராட்சி கரைப்பாளையத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, அங்கன்வாடி, அரசு நடுநிலைப்பள்ளி, ரேசன் கடை, தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணைகள், தேங்காய் களம் ஆகியவை கரைப்பாளைத்தில் உள்ளது. இந்நிலையில், கோவை ரோடு மேட்டுக்கடையில் இருந்து கரைப்பாளையம் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் அந்தவழியாக செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை கைவிடவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: