சேலம்,ஜீலை 02.
பாலியல் வன்முறைக்கு எதிராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சிறப்பு கண்காட்சி சேலம் சூசன் மஹாலில் திங்களன்று நடைபெற்றது.
பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக சிறப்பு கண்காட்சி தமுஎகச மாவட்ட செயலாளர் நிறைமதி தலைமையில் சேலத்தில் நடைபெற்றது. கண்காட்சியை மாநில பொதுச்செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர்
பாலியல் சட்டங்களை கடுமையாக்க வேண்டும். குடும்பங்கள், பள்ளிகள், சமூக பண்பாட்டு தளங்களில் பெண்களை தாழ்வுப்படுத்தி பேசிவருகிறது. பெண்களை தவறாக சித்தரித்து வருகிறது. ஆடைகள் அணிவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. பெண்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் அவர்கள் வாழ அனுமதிக்க வேண்டும். போகப்பொருளாக பார்க்கும் நிலையை மாற்ற வேண்டும். பெண்கள் மீதான வன்முறைகளை வெளியில் சொல்ல பெண்கள் தயக்கம்
காட்ட கூடாது. சில பெண்களுக்கு தற்போது குடும்பத்திலிருந்தே பாதுகாப்பு குறைந்து உள்ளது. பெண்கள் பிரச்சனைகள் குறித்து அரசு பாடத்திட்டங்களில் எடுத்து கூற வேண்டும். என பேசினார்.
இதில் இந்திய மாணவர் சங்க மாநில துணைத்தலைவர் எம்.கண்ணன், மாவட்ட செயலாளர் கவின் ராஜ், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந்தரி, தமுஎகச மாவட்ட தலைவர் மதுரபாரதி, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங், மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி, மற்றும் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாணவர் தமுஎகச நிர்வாகிகள் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.