எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகும் விதமாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து திண்டுக்கல்லில் சிபிஎம் மற்றும் தலித் அமைப்புகள் சார்பாக நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 300பேர் கைதானார்கள்.  போலிசாருடன் தள்ளுமுள்ளு நடைபெற்றது.
தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகும் விதமாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டித்தும், இத்தீர்ப்பை செல்லாததாக்கிட உடனடியாக அவசர சட்ட பிரகடனம் செய்து அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திங்களன்று சிபிஎம் மற்றும் தலித் அமைப்புகள் மூலமாக நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி உள்ளனர். முன்னதாக சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி பேருந்து நிலையம், பெல்பெர்க் ரோடு, நாகல் நகர் வழியாக ரயில் நிலையத்தை அடைந்தது. ரயில் நிலையத்தில் போலிசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ரயில் மறியல் செய்ய போலிசார் அனுமதி மறுத்து தடுப்புகளை வைத்திருந்தனர். தடுப்புகளை மீறி செல்ல முயன்ற போராட்டக்காரர்களுடன் போலிசார் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதனையடுத்து வேறு வழியில் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த மறியல் வீரர்கள் ரயில் தண்டவாளத்திற்கு புகுந்தனர். அப்போது மயிலாடுதுறை ரயில் வந்தது. மறியல் வீரர்கள் மயிலாடுதுறை ரயிலை மறித்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் மோடி அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை போலிசார் கைது செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் சார்பாக மாநிலக்குழு உறுப்பினர் என். பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கமலக்கண்ணன், ராணி, பிரபாகரன், ஒன்றிய நகர நிர்வாகிகள் ஆஸாத், அஜாய்,கந்தசாமி,சிவமணி,சக்திவேல்,முனியப்பன்,ராஜரத்தினம்,பெருமாள்,சின்னக்கருப்பன்,சூசைமேரி,சௌந்திரராஜன்,கலைச்செல்வன், மாணிக்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கே.கருப்புசாமி, கல்யாணசுந்தரம், குருசாமி, பாலச்சந்திரபோஸ், பாலாஜி, டி.முத்துச்சாமி, ஸ்டாலின், கருணாகரன்,ஜானகி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகள் எம்.ஆர்.முத்துச்சாமி, அருள்செல்வன், சின்னக்கருப்பன், வனஜா, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டச்செயலாளர் அன்பரசு மற்றும் மைதீன்பாவா, திருச்சித்தன்,ஸ்வீட்ராஜா, ஆற்றலரசு, பகுஜன்சமாஜ் கட்சிய்ன மாவட்டச் செயலாளர் சூ.ச.மனோகரன், அருந்தமிழர் மக்கள் இயக்கத்;தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.ரா. தங்கபாண்டியன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் மருதைபோஸ், ஆதிதமிழர் கட்சியி;ன் மாவட்டத்தலைவர் சக்திவேல், தலித் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கணேசன், புலேந்திரன் (பெரியார் திராவிடர் கழகம் )ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.