சிவகங்கை ஜீலை2-
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துபோக செய்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை காலவாதியாக்கிட மத்திய அரசு சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி சிவகங்கை,காரைக்குடியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கை ரயில்நிலையம் முன்பு நடந்த ரயில்மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமொழி,மாவட்ட துணைச் செயலாளர் சுடர்மணி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர்மதி,காளையார்கோயில் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்பூபதி,வீரபாண்டி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகேசன்,உலகநாதன்வேங்கையா,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தென்னரசு,மாவட்டத்தலைவர் சுரேஷ்,இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன்,ஆகியோர் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள்.
காரைக்குடி யில் தாலுகா செயலாளர் தெட்சிணாமூர்த்தி தலைமையில் மறியல் நடந்த்து.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தண்டியப்பன், கருப்புச்சாமி, வேணுகோபால் , மாவட்டக்குழு உறுப்பினர்கள் மாணிக்கம்,சிவக்குமார், காந்திமதி,திருப்புத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன்,எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் சிங்காரம்,கல்லல் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் உள்ளிட்டோர் திரளானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.