விவசாயிகள் சங்கத்தின் போராட்டங்களை உக்கிரப்படுத்திட, குறிப்பாக விவசாய இயக்கத்தை வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்குக் கொண்டு செல்லவும், 5 கோடி ரூபாய் விவசாயிகள் சங்கப் போராட்ட நிதி வசூலித்திட அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.இந் நிதியினை விவசாயிகள் சங்கம் ஒவ்வொரு கிளையும் வாளி மூலமாக ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திடமிருந்தும் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சிறிய வணிகர்களிடமிருந்தும் பத்து ரூபாய் வீதம் வசூலித்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வியக்கத்தினை விவசாயிகள் சங்க முன்னணித் தோழர்கள் வரும் 2018 ஜூலை 22, 23 தேதிகளிலும் மற்றும் 29, 30 தேதிகளிலும் நடத்திடுவார்கள். இப்பிரச்சார இயக்கத்தில் அகில இந்திய தலைவர், பொதுச் செயலாளர் முதல் அடிமட்டக்கிளை முன்னணி ஊழியர்கள் வரை பங்கேற்பார்கள்.

விவசாயிகள் போராட்ட நிதி 2018க்கு பல நண்பர்களும், ஆதரவாளர்களும் மனமுவந்து நிதி அளித்திட தங்கள் விழைவினைத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் நன்கொடையை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் கணக்கு எண் – All India KisanSabha A/c No. 20032032844- IFSC ALLA0210163, Allahabad bank, 17 Parliament Street, New Delhi 110 001-க்கு வங்கி மாற்றல் மூலமாக (bank transfer) அனுப்பி வைத்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.