வீணாகும் உணவு குறித்து எச்சரிக்கும் கருவி ஒன்றை இங்கிலாந்தை சேர்ந்த மாணவி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இது அனைவரின் பாரட்டையும் பெற்றிருக்கிறது.

ருமான் மாலிக் என்ற 11வயது மாணவி இங்கிலாந்தின் லிங்கன்ஷையரில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வருகிறார். இவர் பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் கெடுவதற்கு முன்பாக எச்சரிக்கை ஒலி எழுப்பி தெரிவிக்கும் பழ கிண்ணம் ஒன்றைகண்டுபிடித்துள்ளார். இக்கிண்ணத்தில் சிறிய தொடுதிரை மற்றும் காட்சியளிப்பதற்காக ஐகான்களும் உள்ளன. இக்கிண்ணம் உணவு கெடுவதற்கு 2 நாட்களுக்கு முன் பயனரை எச்சரித்துவிடும். ருமானின் இந்த கண்டுபிடிப்பு ஒகாடொ நிறுவனம் நடத்திய  உணவு வீணாக்குதலை தடுப்பது குறித்த போட்டியில்  வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் 13 பில்லியன் யூரோ மதிப்பிலான உணவுப்பொருள்கள் ஆண்டுதொரும் வீணாவதை தடுக்க முடியும் என ருமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ருமானை பாராட்டிய ஒகாடொ நிறுவனம் இந்த கருவியை இன்னும் மேம்படுத்தி உற்பத்தி செய்யும் பணியில் தற்போது இறங்கியிருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.