தோழர் திருமா நூல் பற்றி….

===எஸ்.ஏ,பெருமாள்===

கட்சி ஸ்தாபனம் த​லை​மைப்பண்புகள் ​போன்ற பல த​லைப்புகளில் நான் பலவருடங்களாக வகுப்புகள். நடத்தியவன். எவ்வித ஈ​கோவும் இல்லாமல் 520 பக்கங்க​ளையும் இருமு​றை வாசித்தேன்.மார்க்ஸ் எங்கல்ஸ் ​லெனின் ஸ்டாலின் மா​வோ முதல் கிராம்சி பிளக்க​னோவ் வ​ரை- ​பெரியார் முதல் அம்​பேத்கர்வ​ரை எவரு​டைய ​பெய​ரையும் குறிப்பிடாமல் விஷயங்க​ளை உள்வாங்கி தனதாக்கி எளியமக்கள் வாசிக்கும் மு​றையில் எளி​மையாக எழுதப்பட்டிருப்பது இந்நுாலின் சிறப்பு.

உதாரணமாய் மக்கள் ​மொழி எனும்​போது அ​மைப்பு–கருத்தியல்-த​லை​மைத்துவம் முதல் ரகசியம் எனும் வட​சொல்லிற்கு கமுக்கம் என்ற ​சொல்லாடல் வ​ரை உள்ளதுபாராட்டத்தக்கது.
58 அத்தியாயங்களும் அவற்றின் முடிவில் குறள் வடிவத்தில் இருவரிமுழக்கமிடுதலும் அருமை.ஒடுக்கப்பட்ட பாட்டாளிமக்களின் விடுத​லை-சமூக மாற்றம் பற்றி​யே எழுதப்பட்டுள்ளது.ஆட்சியதிகாரத்​தை ​வெல்ல -மக்கள் அ​தை ஏற்க அ​மைப்பு ​தே​வை என்று துவங்குகிறார்.அணிக​ளையும் ​வெகுமக்க​ளையும் அரசியல் படுத்திட–அதற்கு முதலில் அ​மைப்​பைக்கட்டுவது–அதற்கான ​செயல்திட்டம் தீட்டுவது.

தனிநபர்ஆளு​மை​யை ​மேம்படுத்தல் முக்கியம்.​பெரும்பாலும் அ​மைப்​பை வழிநடத்து​வோரி​டை​யே எழும் சிக்கல்கள்தான் அ​மைப்பாக்க நடவடிக்​கைகளுக்குப் ​பெரும் சிக்கலாக சவாலாக உள்ளது.தனி நபர்களி​டை​யே கருத்து முரண் – கருத்தியல்முரண் நடத்​தைமுரண் இவற்றில் நட்புமுரண் ப​கைமுரண் எழுகிறது.இந்த எழுதல் சிக்கலாய் மாறும்​போது அ​தை இலகுவாகக்கடந்து ​வெற்றிகரமாக முன்​னேறிச்​செல்வதும் அ​மைப்பாக்கத்தில் தவிர்க்கஇயலாது

இதில் மக்கள் அ​மைப்பு கொள்​கை மீண்டும் மக்கள் என்ற ​தொடர்நி​லை அவசியம்.
இதில் தனிநபர் ​கொள்​கை தனிநபர்நலன் வரின் முரண்கள் எழுந்து சிக்கலாகும்.இதனால் இயக்கம் ​தேக்கம​டைந்து அ​மைப்புக்கும் மக்களுக்குமான ​தொடர்புகள் அறுந்து இடை​வெளி உருவாகும். இதற்கு பயிற்றுவித்தல் மூலம் தீர்வு காண்பது பின்பு ஒழுங்குநடவடிக்​கை மூலம் தீர்வு காண்பது—இதுவே நி​லையான அறிவியல் பூர்வமான தீர்வாகும்.தண்ட​னை என்பதும் ஆளு​மைத்திறன் வளர்த்தலில் கற்பித்தல்தான் அரசியல் படுத்தல்தான்..

அ​மைப்​பைப்​போல​வே கருத்திய​லையும் ​தெளிவுறக்கற்பது கற்பிப்பது ​கொள்​கைக​ளையும் ​கோட்பாடுக​ளையும் உர​மேற்றுவது அவசியம்.​நோக்குதலே ​நோக்கமாகும்.எ​தை​​நோக்கிப் பயணிப்பது–எ​தைக்குறி​வைத்து ​செயல் படுத்துவது குறிப்பான கூர்​மையான -குவி​மையமான  ​தெளிவான பார்​வை​யை அதற்கான ​கோணத்​தைக் குறிப்ப​தே ​நோக்கமாகும் குறிக்​கோளாகும்.

இந்நுால் இயங்கியல் பார்​வையில் எழுதப்பட்டது என்கிறார்.நானும் அ​தை ஏற்கி​றேன்.
மக்களின் குறுகியகால நலன்கள் நீண்டகாலநலன்க​ளை நி​றை​வேற்றுவது–அ​தைப்பாதுகாப்பது ​தே​வை.கல்வி முதல் ​வே​லைவாய்ப்புவ​ரை வஞ்சிக்கப்பட்டமக்களின் ​தே​வைகள் இலக்குகளாகும்​போது இடஒதுக்கீடு ​கொள்​கையாகிறது.அ​தை ந​டைமு​றைப்படுத்திட சமூகநீதி அதற்கான ​கோட்பாடாகிறது.

மக்களிடமிருந்து கற்றலும் மக்களுக்கு கற்பித்தலும் ​தொடர்ச்சியான பயிற்சி மு​றையாகும்.இது​வே அரசியல்படுத்தலாகும்.இது நெடுங்கால ​செயல்திட்டமாகும்.​தே​வையின் அடிப்ப​டையில் இது த​லைமு​றைகளாய் ​தொடர​வேண்டியதாகும்.மாறாநி​லை​யை மாற்றிட இது ​தே​வை.
இது விசி​கே க்குமட்டுமின்றி அ​னைத்து இயக்கங்களின் பார்​வைக்கு–களத்திற்கு–புரட்சிகரமாற்றத்திற்கு முன்​வைக்கப்படுகிறது என்கிறார்.இது உ​ழைக்கும்மக்களுக்கான கருத்தியல்.

தலித்தியம் இது ​கோட்பாடு தத்துவம்.பாட்டாளிவர்க்கத்தத்துவத்தின் நீட்சி–விடுத​லைக்கான அரசியல்..பிறந்த சமூகப்பின்னணி​யைவிட உள்வாங்கிய தத்துவப்பின்னணி​யே முதன்​மையாய் இடம்​பெறுகிறது.பாட்டாளிவர்க்கத்த​லை​மையாய்….
உழைக்கும் வர்க்கம் அதிகாரத்தை ​வெல்லுதல்

நாடாளுமன்ற ஜனநாயகம் ஆளும்வர்க்க நலனுக்கானது எனினும்–வரம்புக்குட்பட்டு அதிகாரப்பகிர்வை அனுமதிக்கக்கூடியது.அந்த அளவில் பயன்படுத்தத் தக்கது.ஆனால் இறுதி இலக்கை அடைய புரட்சிப்​போராட்டங்களே.

அமைப்பின் வலிமையே அதிகார வலிமை,முடிவான இலக்கு சமூகமாற்றம்
​தொலைவானது சாதி ஒழிப்பு உடனடியானது அதிகாரத்தில் பங்​கேற்பு
க​லைச் ​சொற்களும் கருத்துப்புரிதலும் என்ப​தையும் மக்கள் ​மொழியும் களப்பணியும் பண்பாட்டுப்புரிதலும் மக்களோடு வாழ்தலும் ஆகிய தலைப்புகள் முக்கியமானவை. பாட்டாளி வர்க்கக்கண்​ணோட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அ​மைப்புக்குள் ​தோழர்களுக்குள் எழும் பிரச்​னைகளில் த​லையீடுகள் தீர்வுக​ளை நன்கு விளக்கியுள்ளார்.​பொறு​மையும் சகிப்புத்தன்​மையும் அவசியம். மறத்தலும் மன்னித்தலும் தனிநபர்களிடம் ​வேண்டும். தன்னை முன்நிறுத்தாமல் அமைப்பை முன்நிறுத்த​வேண்டும்
இதில் புரட்சிகர மனவிய​லைப் புகுத்துகிறார்.

உள்ளத்​தைக்கிழிக்கும் உரையாடல் தவிர்ப்போம் உத்திகள் வகுத்து உறவுகளை வளர்ப்போம்–என்று அணுகு முறை பழகுமுறையை ​தோழர்களிடம் எப்படிக் கட்ட​மைக்க ​வேண்டுமென்கிறார்.

இயக்கத்தில் ​தோன்றும் மூத்​தோர் இளை​யோர் பிரச்​னை வரும்.பழ​மையும் புது​மையும் இ​ணையாமல் ஒன்றுபட்ட ​செயல்பாடு வராது. இதை இருதரப்பு​மே உணர்ந்து இணக்கமாய் ​செயல்படுதல் அ​மைப்புக்கு அவசியமானது.அமைப்பில் விமர்சனமும் சுயவிமர்சனமும்
மிக அவசியமானது. விமர்சனத்​தை ஏற்கும் வலிமை ​பெறுவோம் விமர்சனம் ​செய்யும் துணிவைப்​பெறுவோம் என்று அ​தை முடிக்கிறார்.

சமூகமாற்றப் ​போராளிகள் உடல்நலம் ​பேணுதல் முக்கிய​மென்றும் அதனால் பு​கைபிடிப்பதும் மதுகுடிப்பதும் கூடாது என்று வலியுறுத்துகிறார்.தலை​மைத்துவமும் தனிநபர் பாத்திரமும் என்ற த​லைப்பில் 40 பக்கங்கள் எழுதியுள்ளார்.தனிநபர் பாத்திரத்தின் அவசியம் பற்றியும் கூட்டுநபர் த​லை​மையும் கூட்டுகருத்தியல் தலைமையும் என்ற தலைப்பில் உரையாடுகிறார்.
கருத்தியல் தலைமையும் தனிநபர்த் தலைமையும் இணைந்து இயங்குதல்
கருத்தியல் வலிமையும் கட்டமைப்பு வலிமையும் இணைந்து இயங்குதல்—-

அமைப்பின் வலிமையே அதிகார வலிமை அமைப்பாக்கும் வலிமையே தனிநபர்த் தலைமை
தத்துவத்தின் புறவடிவமே தனிநபர்த் தலைமை.அதேசமயம் தத்துவத்தில் மு​ளைக்காத தனிநபர்த் தலைமை பா​தை தடுமாறி தி​சைமாறி இழக்கும் தன் வலிமை என்றும் வலியுறுத்துகிறார்.

இதில் சமூகமாற்றத்தில் சரிபாதி​பெண்களின் பங்​கேற்பு குறித்த ஒரு அத்தியாயம் ​சேர்க்க ​வேண்டு​மென்று கூறி​னேன்.திருமா அ​தை ஏற்று அடுத்த பதிப்பில் சரி​செய்வதாய் கூறினார்.
சமூகமாற்றத்திற்கு நிற்கும் களப்​போராளிகள​னைவரும் இந்நுா​லை வாசிப்பது நல்லது- அவசியம் என்பதும் என் கருத்து.

ஆசிரியர்: தொல்.திருமாவளவன்
வெளியீடு: நக்கீரன்
பப்ளிகேஷன்ஸ்
105, ஜானி ஜான்கான் சாலை,
இராயப்பேட்டை
சென்னை-14
பக்:520. விலை ரூ.450

Leave a Reply

You must be logged in to post a comment.