மன்னார்குடி;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூத்தாநல்லூர் நகரச் செயலாளர் தோழர் பி.சர்புதீன் அவரது சொந்த ஊரான லட்சுமாங்குடியில் காலமானார். அவருக்கு வயது 70. சிறிது காலம் உடல் நலம் குன்றியிருந்த அவர், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.
பி.சர்புதீன் 1980 ஆம் ஆண்டு கட்சியில் இணைந்து 37 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் பல பொறுப்புகளில் பணிபுரிந்து வந்தார்.

கட்சி அறைகூவல் விடுக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் இயக்கங்களிலும் முழுமனதுடன் உறுதியுடன் பங்கேற்று வந்தார். மார்க்சீயத்தின் தத்துவார்த்த கோட்பாடுகளை அனைவருக்கும் மிக எளிமையாக விளக்கும் திறன் படைத்தவர். அரசியல் போராட்ட மேடை பேச்சுகளில் எளிமையாகவும் உணர்ச்சிகரமாகவும் பேசுவதில் வல்லவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் கே.கைலாசம், மன்னார்குடி நகர்ச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் எம்.திருஞானம், மூத்த கட்சித் தோழர் எஸ். தங்கராசு, ஒன்றிய நகர்க் குழு உறுப்பினர்கள் கே.டி.கந்தசாமி, டி.பன்னீர்செல்வம், கே.டி.எம். நூர்முகமது, வி.லெட்சுமணன், மன்னன் மணி, கே.அகோரம், ஜி. ரெகுபதி உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் கூறினர். தோழர் சர்புதீனின் இறுதிச் சடங்கு லெட்சுமாங்குடியில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

Leave A Reply

%d bloggers like this: