புதுதில்லி;
வேதபாட சாலை படிப்புக்களையும், முறையான கல்விமுறை என்று அறிவிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தீர்மானித்துள்ளது.

பழங்காலத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் குருகுல முறையில் கல்வி போதிக்கப்பட்டு வந்தது. இவை பெரும்பாலும் வேதக்கல்விதான். அதனை எல்லோரும் படிக்க முடியாது. அனுமதியும் இல்லை. தற்போது நவீன கல்விமுறை வந்துவிட்ட பின், எல்லோரும் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனினும் தங்களின் சனாதனத்தை விட்டுக் கொடுக்க முடியாதவர்கள், குருகுலக் கல்வி முறையை இன்னும் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதனை முறையான கல்வி முறையாக ஏற்பதில்லை.இந்த குருகுல கல்வி முறையைக் கொண்டிருக்கும், வேதபாடசாலைகளில் முதன்மையானதாக உஜ்ஜைனி நகரிலுள்ள மகரிஷி சந்திபானி ராஷ்ட்ரிய தேவ வித்யா ப்ரடிஷ்ஸ்தான் உள்ளது. மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக, இந்த ப்ரடிஷ்ஸ்தானத்திற்கு, தன்னாட்சி கொண்ட கல்வி நிலையமாக அங்கீகாரம் அளித்தது. எனினும் இங்கு வழங்கப்படும் போதனைகளை முறையான கல்விமுறையாக அங்கீகரிக்கவில்லை.

ஆனால், தங்களின் குருகுலத்தில் படிப்பவர்களுக்கும் பத்தாம் வகுப்பு (வேத பூஷன்), பன்னிரண்டாம் வகுப்பு (வேத விபூஷன்) ஆகிய தேர்வுகளை நடத்தி, முறையான கல்விமுறையாக அங்கீகரிக்க வேண்டும் என்று உஜ்ஜைனி தேவ வித்யா ப்ரடிஷ்ஸ்தான், அரசுக்கு கோரிக்கை விடுத்தது.இந்த வேண்டுகோளை பரிசீலிப்பதாக மத்திய அரசும் தற்போது உறுதியளித்துள்ளது. சிபிஎஸ்இ-யின் கருத்து பெறப்பட்டு அதன்படி முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: