சேலம்,
பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 சேலம் மாநகராட்சிக்குட்பட்ட முங்கம்பாடி தெருவில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த தெருவில் கடந்த 12 ஆண்டுகளாக புதிய சாலை போடவில்லை என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக அந்த சாலை தோண்டப்பட்டு இதுவரை சீரமைக்கப்படவில்லை எனவும். இதனால் அவ்வழியே செல்ல பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவி சிரமப்படுகின்றனர், மேலும் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் போது விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சாலையை சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலையை நீண்ட காலமாகமாகியும் சீரமைத்து தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் வெள்ளியன்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து தகவல் அறிந்த வந்த மாநகராட்சி அதிகாரியையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: