ஈரோடு,
மலையாளி சமுகத்தை சேர்ந்த பழங்குடி மக்களுக்கு எஸ்.டி.சாதிச்சான்றிதழ் கேட்டு தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கம் சார்பில் வியாழனன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள மலையாளி இனமக்களுக்கு எஸ்டி பழங்குடியினர் சான்று வழங்கி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மலைகளில் வாழும் பழங்குடி மக்களுக்கு மட்டும் சாதிச்சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இதனால், மலையாளி பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு நலத்திட்டங்கள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே, தற்போது ஓசி (இதர வகுப்பினர்) சான்று என்று வழங்குவதால் எந்த பயனும் இல்லை. மாவட்ட நிர்வாகம் மலைகளில் வாழும் பழங்குடி மலையாளி மக்களுக்கு எஸ்.டி இன மக்கள் என சாதிச்சான்றுதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கம் (வலிபார் சங்கம்) சார்பில் மாநிலத்தலைவர் எம்.சடையலிங்கம் தலைமையில், கடம்பூரில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் மனு அளித்துள்ளர். இதனை விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: