டேராடூன்;
இடமாறுதல் கோரி உத்தரகண்ட் பாஜக முதல்வரிடம் வாக்குவாதம் செய்த பள்ளி ஆசிரியை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் பள்ளிக் கல்வித்துறை தொடர்பான ‘ஜனதா தர்பார்’ நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத்தும் கலந்துகொண்டார். அப்போது, போலீஸ் தடைகளைத் தாண்டி முதல்வரிடம் வந்த, உத்தரா பகுகுணா என்ற ஆசிரியை, ‘25 ஆண்டுகளாக தொலைதூர இடத்தில் பணியாற்றும் தன்னை மாறுதல் செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தினார். தன்னுடைய இந்த கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் ஆவேசமாக எடுத்துரைத்தார். மேலும் முதல்வர் திரிவேந்திர ராவத்திடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

இதனால் கோபமடைந்த திரிவேந்திர ராவத், ஆசிரியை உத்தரவை ரத்து செய்து உடனடியாக கைது செய்யுங்கள் என்று மேடையிலேயே உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி அவரை சஸ்பெண்ட் உத்தரவிட்டார். அதனடிப்படையில், ஆசிரியை உத்தராவை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், பின்னர் மாலையில் அவரை விடுவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.