ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து பணிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள, வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசு இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.ஏற்கெனவே, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, கல்லூரி மாணவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற ஆடைகளை மாணவர்கள் அணியக்கூடாது என்று மாநில உயர் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.

தற்போது, ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கும் ஆடை கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டு, அந்த ஊழியர்கள் ஜீன்ஸ், டி- சர்ட் அணிந்து பணிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
‘தொழிலாளர் நலத்துறையில் பணியாற்றும் சில அதிகாரிகள், ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் இதர அநாகரிகமான, கண்ணியக் குறைவான ஆடைகளை அணிந்து அலுவலகத்துக்கு வருகிறார்கள்; இதனை மாற்றி, நாகரிகமான, கண்ணியமான உடைகளை அணிந்து ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்று ராஜஸ்தான் மாநிலத் தொழிலாளர் நலத்துறை ஆணையர் கிரிராஜ் சிங் சுற்றறிக்கை விடுத்துள்ளார். இதற்கு ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘ஜீன்ஸ், டி-சர்ட் ஆகிய உடைகள் அநாகரிகமானவை என்று எப்படி கூற முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ள அரசு ஊழியர்கள், அரசின் இந்த உத்தரவுக்கு சட்டத்தில் இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.