காஞ்சிபுரம்;
நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்பனை செய்ததாக முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிரம் மாவட்டம் வேதமங்களத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 29 செண்ட் நிலத்தை கடந்த 2006 ஆம் ஆண்டில் முறைகேடாக விற்பனை செய்து, அந்த தொகையை கையாடல் செய்ததாக அப்போதைய சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளராக இருந்த ராதாரவி உள்ளிட்டோர் மீது நடிகர் சங்கத்தின் தற்போதைய பொதுச்செயலாளர் விஷால் புகார் அளித்திருந்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த இந்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நிலத்தை முறைகேடாக விற்ற புகாரில், முகாந்திரம் இருந்தால் சரத்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு கூறி வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. இந்நிலையில், நடிகர் சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட நான்கு பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: