கொல்கத்தா;
மக்களவை முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவருமான சோம்நாத் சட்டர்ஜி பெருமூளை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும், கடந்த திங்கட்கிழமை முதல் மருத்துவமனையிலிருக்கும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: