கோவை,
கோவையில் வங்கி மேலாளரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதால் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். கோவை மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வியாழனன்று காலை கோவை காந்திபுரம் நூறடி சாலையில் 9 வது வீதியில் உள்ள இந்தியன் வங்கி மேலாளர் மாணிக்கவாசகம் என்பவரது அழைப்பின்பேரில் அவரது வீட்டில் துப்புரவு பணிக்காக மகேந்திரன் உள்ளிட்ட 3 பேர் சென்றுள்ளார். அப்போது கழிவு நீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கியதில் மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மகேந்திரனின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மாநகராட்சி பணியாளர்களுக்கு பதிலாக பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த நிர்பந்தித்ததே அவரது உயிரிழப்பிற்கு காரணமெனவும், இப்பணியில் ஈடுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உயிரிழந்த மகேந்திரனின் உறவினர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ரத்தினபுரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: