நாமக்கல்,
இந்திய மாணவர் சங்கத்தின் 25 ஆவது மாநில மாநாட்டினை முன்னிட்டு நாமக்கல்லில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பிரச்சாரம் நடைபெற்றது.

இந்திய மாணவர் சங்கத்தின் 25 ஆவது மாநில மாநாடு கோவையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இம்மாநாட்டை முன்னிட்டு போதையில்லா தமிழகம், விபத்திலா தமிழகம் என்ற முழக்கத்தை முன்வைத்து புதனன்று இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டக்குழு சார்பில் சைக்கிள் பிரச்சார பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை முன்னாள் தலைமை ஆசிரியர் கருப்பண்ணன் துவக்கி வைத்தார். முன்னதாக, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் பி.சிற்றரசு தலைமையில் போதைக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரியில் இருந்து துவங்கிய இந்தசைக்கிள் பேரணி பல்வேறு முக்கிய சாலைகள் வழியாக சென்று நாமக்கல் பேருந்து நிலைய குளக்கரை திடலில் முடிவடைந்தது. இங்கு நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஏ.டி.கண்ணன் சிறப்புரை ஆற்றினார்.

மேலும், மாவட்டத் தலைவர் ரஞ்சித்குமார், மாவட்ட துணை தலைவர்கள் சக்தி, மாவட்ட துணை செயலாளர் தேன்மொழி, காயத்திரி மற்றும் சரவணன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில், நாமக்கல் ஒன்றிய செயலாளர் ஆர்.பிரபாகரன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.