கொல்கத்தா :

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட் ( flipkart ) ல் புகார் தெரிவிக்க கொடுக்கப்பட்ட அழைப்பு எண்ணிற்கு அழைத்தால் வெல்கம் பிஜேபி ( ’welcome to BJP’) என குறுஞ்செய்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர் ப்ளிப்கார்ட இணைய வர்த்தக நிறுவனத்தில்ஹெட்போன் ஒன்றை வாங்க ஆர்டர் செய்திருந்தார். ஆனால், அவருக்கு தவறுதலாக எண்ணெய் விநியோகிக்கபட்டது. இதனால் புகார் தெரிவிக்க அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை அவர் அழைத்தபோது அழைப்பு தானாக துண்டிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் ”உங்களை பாஜகவிற்கு அழைக்கிறோம்” மற்றும் ”முதன்மை உறுப்பினர் எண்” என ஒரு எண்ணும் அவருக்கு வழங்கப்படுவதாக இருந்துள்ளது. பின்பு விசாரணையில் அது பாஜகவின் எண் என கண்டறியப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: