திருப்பூர்,
திருப்பூர் காங்கயம் ரோடு காங்கயம்பாளையம் புதூரை சேர்ந்தவர் ரபிதீன். இவரது மனைவி நதியா என்கிற நதிரா (26). இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். நதிரா மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ரபிதீனுக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் இருப்பதும், சமீபத்தில் விவாகரத்து பெற்றதும், நதிராவுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து நதிரா, ரபிதீனிடம் கேட்டுள்ளார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நதிரா செவ்வாயன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நதிராவின் அண்ணன் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி சில மாதங்களே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.