ராஜ்கோட்;
குஜராத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவரின் முகத்தில் கறுப்புச் சாயத்தைப் பூசி, ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவான ஏபிவிபி குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம், பூஜ் நகரில் கே.எஸ்.கே.வி.கே.யு. என்ற பல்லைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஜூலை 22-ஆம் தேதி செனட் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் ஏற்கெனவே துவங்கி விட்ட நிலையில், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாகவும், தங்களின் வேட்புமனுக்கள் வேண்டுமென்றே நிராகரிக்கப்படுவதாகவும், ஏபிவிபி கும்பல் சர்ச்சையைக் கிளப்பி அராஜகம் செய்துள்ளது.குறிப்பாக, கிரின் பாக்சி என்ற பேராசிரியரை, அவர் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தபோதே, முகத்தில் கறுப்புச் சாயத்தைப் பூசி அவமானப்படுத்தியுள்ளனர். மேலும் கிரின் பாக்சியை பேசக்கூட விடாமல், வகுப்பறையிலிருந்து வெளியே இழுத்துச் சென்று தாக்கியுள்ளனர். சுமார் 1 மணிநேரம் வரை பேராசிரியரை அவர்கள் சித்திரவதை செய்துள்ளனர்.

தற்போது பேராசிரியர் கிரின் பாக்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏபிவிபி கும்பல் நடத்திய இந்த தாக்குதல் நாகரிகமற்றது என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: