சேலம்,
மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சேலத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சேலம் மின் பகிர்மான வட்டத்தில் மின் விஸ்தரிப்பு பணிகளை சிட்டு அக்ரிமென்ட் மூலம் செயல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் புதனன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு மத்திய அமைப்பின் வட்டகிளை தலைவர் வி.ரகுபதி தலைமை வகித்தார். வட்ட கிளை செயலாளர் கருப்பண்ணன் போராட்டத்தை துவக்கி வைத்தார். மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வி.இளங்கோ உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவைத்தார். இதில் மின்சார வாரியத்தில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: