ஜெய்ப்பூர்;
ராஜஸ்தானைச் சேர்ந்த மூத்த பாஜக எம்.எல்.ஏ. கன்ஷ்யாம் திவாரி. 2013 சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (65,350) காங்கிரஸ் வேட்பாளரை வென்றவர்.
இவர், பாஜக-விலிருந்து தற்போது விலகியுள்ளார்.‘பாஜகவை விட்டு விலகியதற்கு 2 காரணங்கள் முக்கியமானவை, முதலில் பாஜக-வில் சர்வாதிகாரம் நிலவுகிறது, சட்டத்திட்டங்கள் எதுவும் இல்லை, கட்சியில் ஊழல் மலிந்துள்ளது. நாட்டில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நிலவுகிறது’ என்று கன்ஷ்யாம் திவாரி கூறியுள்ளார்.
மேலும், ராஜஸ்தான் பாஜக அரசையும், மத்திய அரசையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலை ‘அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியாகவே உள்ளது. அறிவிக்கப்பட்ட எமெர்ஜென்சியை விட தற்போதைய ஆட்சி அபாயகரமாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘நீதித்துறை, சட்ட அமலாக்கத்துறை, ஊடகம் ஆகியவற்றில் ஒரு மறைமுகமான தலையீடுகள், கட்டுப்பாடுகள் இருக்கின்றன; இது எமெர்ஜென்சி காலக்கட்டத்தில் இருந்ததைவிடவும் அபாயகரமானவை’ என்று கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: