ஸ்ரீநகர்;
அமர்நாத் குகைகளில் பனிலிங்கத்தை பார்க்கச் செல்லும் பயணிகளின் யாத்திரை, புதன்கிழமையன்று துவங்கியது. இந்நிலையில், யாத்ரீகர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படலாம் என்று எச்சரித்த காவல்துறையினர், ஜம்மு – காஷ்மீரில் மாநிலத்தில் பாதுகாப்பை பலப்படுத்தினர்.ஆனால், இந்திய அதிகாரிகள் கூறுவதுபோல அமர்நாத் பயணிகளைத் தாக்கும் திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை என்றும், சொல்லப்போனால் அமர்நாத் யாத்ரீகர்கள் தங்களின் விருந்தினர்கள் என்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ‘ஹிஸ்புல் முஜாகிதீன்’ பயங்கரவாத இயக்கத்தின் காமண்டர் ரியாஸ் அகமது பேசும் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ‘அமர்நாத் யாத்ரீகர்களாகிய நீங்கள் பாதுகாப்பு இல்லாமலே யாத்திரையை மேற்கொள்ளலாம்; நீங்கள் எங்களுடைய விருந்தினர்கள், உங்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை; அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக ஜம்மு – காஷ்மீர் போலீஸ் டிஜிபி கூறியுள்ளார்; இதில் உண்மை கிடையாது; நீங்கள் யாத்ரீகர்கள் உங்களுடைய மத கடமையை நிறைவேற்றவே வருகிறீர்கள்; எனவே, நாங்கள் எப்போதும் யாத்திரையை குறிவைப்பது கிடையாது; இனியும் அதனை செய்ய மாட்டோம்; எங்களுடைய ஆயுதம் தாங்கிய போராட்டமானது, எங்கள் மீது வன்முறையை பிரயோகித்தவர்கள் மற்றும் எங்களை ஆயுதம் ஏந்தவைத்தவர்களுக்கு எதிரானது மட்டும்தான்’ என்று ரியாஸ் அகமது தெரிவித்துள்ளார். மேலும், ‘எங்களுடைய போராட்டம் இந்திய மக்களுக்கு எதிரானது கிடையாது’ என்றும் ரியாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: