விருதுநகர்;
அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவ றான பாதைக்கு அழைக்கும் நோக்கில் பேசிய உதவி பேராசிரியை நிர்மலாதேவி மதுரை மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி 6 வது முறையாக மனுத்தாக்கல் செய்தார்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணியாற்றி யவர் உதவி பேராசிரியை நிர்மலாதேவி. இவர், அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளை தவறான பாதையில் ஈடுபடுத்தும் வகையில்
செல்போனில் பேசினார். எனவே, இவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டு தற்போது, மதுரை மத்திய சிறையில் உள்ளார்.இந்நிலையில், தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்
கோரி திருவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் செவ்வாயன்று 6 வது முறையாக ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு புதன்கிழமை (ஜூன்.,27 ம் தேதி) விசார ணைக்கு வருகிறது.மேலும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை யில் உள்ள மதுரை காம ராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகனின் 5 வது முறையாக திருவில்லி புத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற த்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு செவ்வாய்க் கிழமை அமர்வு நீதிபதி
ஆ.முத்துசாரதா முன்னிலை யில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை 29 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.