திருப்பூர்,
மாற்றுத்திறனாளிகளின் நலதிட்டத்தில் நிறுத்திவைக்கப்பட்ட உதவிதொகைகளை உடவே வழங்க மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 3 ஆவது மாநாடு செவ்வாயன்று பார்க் சாலையில் உள்ள கே.எஸ்.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ப.ராஜேஸ் தலைமை வகித்தார். சங்கர நாராயணன் வரவேற்றார். கே.சுப்பிரமணி, ஜெ.செல்வி, குப்புராஜ், திருமலைராஜன், சண்முகநாதன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ஜான்சி ராணி மாநாட்டை துவக்கிவைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ஜெயபால் அறிக்கையை முன்வைத்தார். பின்னல் புக் டிரஸ்ட் என்.கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலகுழு மாவட்ட செயலாளர் வை.ஆனந்தன், எழுத்தாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் வாழத்துரைவழங்கினர்.

cமாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களிலும் செல்வதற்கு சரிவு நடைபாதை அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நலதிட்டத்தில் நிறுத்திவைக்கப்பட்ட உதவித் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். தேசிய ஊரகவேலைவாய்ப்பு திட்டத்தில் கீழ் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொது செயலாளர்ச.நம்புராஜன் நிறைவுரையாற்றினார். புதிய மாவட்ட தலைவராக ஜெயபால், மாவட்ட செயலாளராக ராஜேஸ், மாவட்ட பொருளாளராக ஆர்.காளியப்பன் உள்ளிட்ட 25 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யபட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.