திருவள்ளூர்;
மாணவ,மாணவியர்களின் போராட்டத்தால் ஆசிரியர் பகவான் வெளியகரம் பள்ளியிலேயே பணியில் தொடர கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பகவான்(28). இவர் பாடம் நடத்தும் முறை மிகவும் பிடித்துப்போனதுடன் நன்றாக புரிந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ஆசிரியர் பகவான் பணிநிரவல் காரணமாக வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் ஆசிரியர் பகவானை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பள்ளியை விட்டு வெளியே செல்லாதவாறு ஆசிரியர் பகவானை மாணவர்கள் சூழ்ந்துகொண்டு அழுதனர். இதனால் அவரின் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆசிரியர் பகவான் வெளியகரம் பள்ளியிலேயே பணியில் தொடர கல்வித் துறை அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர். இந்த முடிவால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: