திருப்பூர்,
திருப்பூரில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் நாடுமுழுவதும் ஜூன் 26 தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருப்பூர் மாவட்ட காவல்துறை மற்றும் ரெட் கிராஸ் சார்பில் விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில், 4 அரசுப்பள்ளி மாணவர்கள், 3 அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 600 பேர் கலந்து கொண்டனர். இந்த பேரணிக்கு மாநகர காவல் ஆணையாளர் மனோகரன் கொடியசைத்துதுவக்கி வைத்தார். இதில், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்றனர். திருப்பூர் தென்னம்பாளையம் அரசு பள்ளியில் இருந்து பல்லடம் சாலை வழியாக எல்.ஆர்.ஜி அரசு கலைக்கல்லூரி வரை பேரணியாகச் சென்றனர். பேரணியில் மாணவர்கள் போதை பொருட்களுக்கு எதிரான முழங்கங்கள் எழுப்பியபடியே சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: