கொல்கத்தா;
கஸ்டமர் கேரில் புகார் செய்தவரை, ‘நீங்கள் பாஜக உறுப்பினராகி விட்டீர்கள்’ என்று பிளிப் கார்ட் நிறுவனம் குறுந்தகவல் அனுப்பியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர், ஆன்லைன் மூலம் பிளிப்கார்ட் நிறுவனத்திடம் ஹெட்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு ஹெட்போன் வராமல், எண்ணெய் பாட்டில் வந்துள்ளது. இதையடுத்து அவர், பிளிப்கார்ட் கஸ்டமர் கேரை ‘1800266 1001’ என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளார். ஆனால், போன் ஒரு ரிங்குடன் துண்டிக்கப்பட்டுள்ளது.அதைத்தொடர்ந்து அடுத்த விநாடியே அவரது மொபைல் போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதைத் திறந்து பார்த்தால், ‘பாஜக-வில் இணைந்ததற்கு நன்றி’ என்று குறிப்பிட்டு, உறுப்பினர் எண் அளிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அந்த நபர், இந்த விஷயத்தை தனது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள அவர்களும், பிளிப்கார்ட் கஸ்டமர் கேருக்கு போன் செய்துள்ளனர்.

என்ன ஆச்சரியம், அடுத்த நிமிடமே அவர்களும் பாஜக உறுப்பினர்கள் ஆக்கப்பட்டு விட்டதாக மெசேஜ் வந்துள்ளது.இந்த செய்தி கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்த, தங்களுக்கும் நடந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாஜக தலைவர் திலீப் கோஷ், எஸ்கேப் ஆகியுள்ளார்.ஆனால், ‘1800266 1001’ என்ற டோல் ப்ரீ எண்ணை 3 ஆண்டுகளுக்கு முன்பே ஒப்படைத்து விட்டதாக பிளிப்கார்ட் சமாளித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: