ஜெய்ப்பூர்:
மதுபானத்திற்கு 20 சதவிகிதம் கூடுதல் வரி விதிக்க, ராஜஸ்தான் மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது. பசுவைப் பாதுகாக்கவும், பசுக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்காகவுமே இந்த கூடுதல் வரியை விதிப்பதாகவும் ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.ராஜஸ்தான் அரசானது, அண்மையில் பசுப் பாதுகாப்பிற்கென தனி அமைச்சகத்தை உருவாக்கிய நிலையில், அடுத்தகட்டமாக நிதி ஒதுக்கீடு வேலைகளில் இறங்கியுள்ளது. இதற்காக, ராஜஸ்தானில் விற்கப்படும் உள்ளூர் மதுபானங்கள், அந்நிய நாட்டு மதுபானங்கள், இந்தியாவில் தயாரிக்கப்படும் நாட்டு மதுபானங்கள், மற்றும் பீர் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு 20 சதவிகிதம் கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும், இந்த வரி விதிப்பு ஜூலை 23-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.