நாமக்கல்,
சாலை விரிவாக்கத்தின்போது அப்புறப்படுத்தப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை மீண்டும் அமைத்தரக்கோரி பரமத்தி வேலூர் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே கவுண்டிபாளையம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, பரமத்தி வேலூரை அடுத்த கந்தம்பாளையம் அருகே கவுண்டிபாளையத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகிறோம். எங்கள் ஊர் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழற்கூடம் திருச்செங்கோடு – பரமத்தி சாலை விரிவாக்கப் பணிக்காக தற்காலிகமாக அப்புறப்படுத்தப்பட்டது. தற்போது சாலை விரிவாக்க பணி நிறைவடைந்து போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.

ஆனால், கவுண்டிபாளையத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பயணிகள் நிழற்கூடம் மீண்டும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கவுண்டிபாளையத்தில் இருந்து வெளியூருக்கு செல்லும் பயணிகள் மற்றும் பள்ளி,கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடும் வெயிலில் அவதிகுள்ளாகின்றனர். மேலும் கவுண்டிபாளையத்தில் உள்ள நிழற்கூடம் அமைக்கப்படாமல் இருப்பதால் இந்த வழியாக செல்லும் பேருந்துகள் எதுவும் கவுண்டிபாளையத்தில் நிற்காமல் செல்கின்றது. இதனால் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வெளியூர் சென்று வந்த வானக்காரன் பாளையம், வடிவேலன்பாளையம், பெருமாபட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் இன்னலுக்குள்ளாகின்றனர். எனவே, தாங்கள் எங்கள் ஊரில் அப்புறப்படுத்தப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை மீண்டும் அமைத்து தருவதுடன், கவுண்டிபாளையத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று பயணிகளை ஏற்றி, செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.