சேலம்,
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகானுக்கு உடல்நல பாதிக்கப்பட்டதை அடுத்து சேலம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சேலம்- சென்னை எட்டு வழிச்சாலைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வன்முறையை தூண்டுதல், அரசுக்கு எதிராக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 17 ஆம்தேதி அவரை கைது செய்த காவல்துறையினர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் உண்ணாவிரத்தை கைவிட்டார். இதற்கிடையே சிறையில் அவரை மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில் அவருக்கு சிறுநீரக தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து உயர் சிகிச்சைக்காக செவ்வாயன்று சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் மன்சூர்அலிகான் அழைத்து செல்லப்பட்டார். இதற்கு பின்னர் அவருக்கு சிகிச்சை முடிந்தவுடன் மீண்டும் சேலம் மத்திய சிறைக்கு காவல்துறையினர் அழைத்து சென்று அடைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: