பொள்ளாச்சி,
சர்வேதேச போதை போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றுன.

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு செவ்வாயன்று பொள்ளாச்சியில் சுபாஷ் தனியார் கல்லூரியின் சார்பில் பொள்ளாச்சி காந்தி சிலையிலிருந்து விழிப்புணர்வு பேரணி துவங்கியது. மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜவகர் பேரணியினை துவக்கி வைத்தார். இதில் போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தி மாணவ, மாணவிகள் முக்கியசாலையாக வழியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

குன்னூர்:
இதேபோல், நீலகிரி மாவட்டம், குன்னூரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் குன்னூர் உட்கோட்டம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் துவங்கிய இப்பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் குன்னூர் காவல்நிலைய ஆய்வாளர் ஜெயமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். முக்கிய சாலைகள் வழியாக சென்ற இப்பேரணி குன்னூர் பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.