கோவை,
கோவை விமான நிலையத்திற்குள் துப்பாக்கி தோட்டாக்களுடன் வந்த பாஜக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட கோட்டபொறுப்பாளராக இருப்பவர் செல்வகுமார். இவர் செவ்வாயன்று காலை சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரை சோதனை செய்த பாதுகாப்பு படையினர் அவரிடம் துப்பாக்கியின் தோட்டாக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பீளமேடு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து விமானநிலையம் வந்த காவல்துறையினர் செல்வகுமாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தான் பாஜக நிர்வாகி என்றும், வைத்திருப்பது உரிமம் பெற்ற துப்பாக்கியின் தோட்டாக்கள் என்றும் செல்வக்குமார் தெரிவித்தார். மேலும், தவறுதலாக தோட்டாக்களை விமான நிலையத்திற்கு எடுத்து வந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து இவருடைய துப்பாக்கியின் அசல் உரிமத்தை வரவழைத்து உறுதி செய்தனர். இதனையடுத்து இவரை விடுவித்தனர். அதேநேரம் விமான நிலையத்திற்குள் பாஜக நிர்வாகி துப்பாக்கி குண்டுகளுடன் வந்த சம்பவத்தால் சிறிதுநேரம் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: