திருப்பூர்,
தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ‘

வருவாய் துறையில் பணியாற்றும் கிராம உதவியாளர்களுக்கு 5வது ஊதியக் குழு முதல் 8வது ஊதிய குழு வரை காலமுறை ஊதியம் வழங்கப்பட்டவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக தலையீடு செய்து அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெற்றியில் பட்டை நாமம் இட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காந்திராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். துணை செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர்கள் பட்டை நாமம் போட்டு திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: