கோவை,
கோவையில் கல்லூரி மாணவி மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள வண்டிபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமியின் மகள் ஹரிபிரியா (வயது 18). இவர் கோவை அரசு கலை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான என்.சி.சி. முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ஹரிபிரியா உள்பட ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். திங்களன்று நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் ஹரிபிரியா தனது அறைக்கு திரும்பினார். அப்போது திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த சக மாணவிகள் மற்றும் அதிகாரிகள் ஹரிபிரியாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: