புதுதில்லி;
நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட்டுக்கு எளிதாக விண்ணப்பிக்க வழி செய்யும் ‘பாஸ்போர்ட் சேவா’ எனப்படும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஒரு சில மாவட்ட தலைநகரங்களில் மட்டுமே பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளதால், மாநிலத்திற்குள்ளேயே சில நூறு கிலோமீட்டர் பயணம் செய்துதான் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நிலையும் உள்ளது.இந்நிலையில் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட்டுக்கு எளிதாக விண்ணப்பிக்க வழி செய்யும் ‘பாஸ்போர்ட் சேவா’ எனப்படும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், நநாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே அலைபேசி மூலம் விண்ணப்பிக்கும் ’ பாஸ்போர்ட் சேவா’ என்னும் மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிடும் முகவரியில் காவல் துறையின் வழக்கமான சரிபார்ப்பு பணிகள் முடிந்த பின்னர் தபால் மூலம் பாஸ்போர்ட் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய முறையின் மூலம் பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகள் மிக துரிதமாகவும், சுலபமாகவும் முடியும் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.