ஸ்பெயின்-மொரோக்கோ 36-வது லீக் ஆட்டம் அணிகள் மோதின.மொரோக்கோ அணி 2 தோல்விகளுடன் நாக் அவுட் சுற்று வாய்ப்பை இழந்தது.இந்த ஆட்டத்தில் டிரா செய்தாலே நாக் அவுட் சுற்றுக்கு எளிதாக முன்னேறலாம் என்ற மனநிலையில் ஸ்பெயின் அணி களமிறங்கியது.

இந்த தொடரில் தற்காப்பில் மட்டுமே கவனம் செலுத்திய மொரோக்கோ அணி ஸ்பெயின் அணிக்கெதிரான ஆட்டத்தில் நடுகளத்திற்கு முன்னுரிமை அளித்தது.இதன் பலனாக 14-வது நிமிடத்தில் அந்த அணியின் பவுடேய்ப் கோலடித்தார்.இதற்குப் பதிலடியாக ஸ்பெயின் அணியின் இஸ்கோ 14-வது நிமிடத்தில் கோலடிக்க ஆட்டம் சூடு பிடித்தது.முதல் பாதியில்1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் மொரோக்கோ அணியின் கை ஓங்கினாலும் கோலடிக்கும் வாய்ப்புகளை அந்த அணி வீரர்கள் வீணடித்தனர்.81-வது நிமிடத்தில் மொரோக்கோ அணியின் யூசுப் என்-நெஸ்ரி கோலடித்தார்.பதிலுக்கு ஸ்பெயின் அணி கோலடிக்குமா என ஆவலுடன் இரு நாட்டு ரசிகர்கள் மவுனம் காத்ததால் மைதானமே அமைதி பூங்காவானது.

90-வது நிமிடம் வரை ஸ்பெயின் அணி பதிலுக்கு கோலடிக்க வில்லை.மொரோக்கோ அணி வெல்லும் என எதிர்ப்பர்க்கப்ட்ட நிலையில்,கூடுதல் நிமிடத்தில் (90+1) ஸ்பெயின் வீரர் லாகோ அஸ்பாஸ் கோலடித்தார்.ஆனால் பந்து வருவதற்கு முன்னரே ஸ்பெயின் அணி வீரர்கள் முன்னேறியதாக “பவுல்” அளிக்கப்பட்டு கோல் இல்லை என அறிவிக்கப்ட்டது. பின்பு வீடியோ நடுவர் முறையில் ஸ்பெயின் அணிக்குக் கோல் வழங்கப்ட்டது இறுதியில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்ததது.டிரா செய்ததால் ஸ்பெயின் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

Leave a Reply

You must be logged in to post a comment.