நீலகிரி,
இலவச தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள், மிதமான மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் அம்மாக்கள் ஆகியோருக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. எனவே, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 45 வயதுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டைநகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், கார்டன் ரோடு, நீலகிரி மாவட்டம் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு 0423 2440725 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: