பிரௌசரில் மூடிய டேபை மீண்டும் திறக்க
ஃபயர்பாக்ஸ், குரோம் உள்ளிட்ட எந்த இண்டெர்நெட் பிரௌசரை கணினியில் நீங்கள் பயன்படுத்தினாலும், அதில் டேப் வசதி மூலம் பல இணையதளங்களை திறந்து வைத்திருப்பீர்கள். தவறுதலாக அதில் ஏதேனும் டேப் பக்கத்தை மூடிவிட்டால் அதனை உடனடியாகத் திறக்க வழி உள்ளது.Ctrl + Shift + T என்ற விசைகளை ஒன்றாக கீபோர்டில் அழுத்தினால் கடைசியாக மூடிய டேப் மீண்டும் பிரௌசரில் திறக்கும். இதுபோல கடைசியாக மூடிய வேறு பல டேப்களையும் Ctrl + Shift + T விசைகளை ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக அழுத்தினால் திறக்க முடியும்.

கணினியில் தவறுதலாக கோப்பை அழித்துவிட்டீர்களா?
கணினியில் தட்டச்சு செய்யும்போது முன்னர் செய்த மாற்றத்திற்கு திரும்ப Ctrl + Z கீகளைப் பயன்படுத்துவோம், அதே கீகளைப் பயன்படுத்தி தவறுதலாக அழித்த கோப்பை உடனடியாகத் திரும்பப் பெறலாம்.

யுடியூப் பார்க்க உதவும் குறுக்குவிசைகள்
மேசைக்கணினி, லேப்டாப் மூலமாக யுடியூப் தளத்தில் வீடியோ பார்ப்பவர்கள் மௌஸ் பயன்படுத்தாமல் கீபோர்ட் மூலமாகவே வீடியோவை கட்டுப்படுத்த முடியும். பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோவை நிறுத்த spacebar அழுத்தவும். K என்ற எழுத்தை அழுத்தியும் வீடியோவை அதே இடத்தில் நிறுத்தி(Pause) வைக்கலாம். J எழுத்து கீயை அழுத்தினால் 10 நொடிகள் பின்நோக்கியும் (Backward), L கீயை அழுத்தினால் 10 நொடிகள் முன்நோக்கியும் (Forward) காட்சி நகர்த்தப்படும். M எழுத்தை அழுத்தினால் ஒலி நிறுத்தப்படும் (Mute).

வாட்ஸ்அப் மெஸெஜ் புளூடிக் வசதியை நிறுத்த
வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் தாங்கள் அனுப்பிய செய்தியை படித்துவிட்டார்கள் என்பதை அறிய இரண்டு புளூ டிக்குகள் காட்டப்படும். நாம் படித்து விட்டோம் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவும் இந்த வசதி சில நேரங்களில் தொல்லையாக உங்களுக்குத் தெரியலாம், அப்போது இந்த வசதிய நீங்கள் நிறுத்திவைக்க வழி உள்ளது.இதனை செயல்படுத்த வாட்ஸ்அப் மெனுவில் செட்டிங்ஸ் செல்லவும். அதில் Account மெனுவில் நுழைந்து Privacy-யில் ‘Read Receipts’ என்றுள்ள வசதியை ஆஃப் செய்தால் போதும். ப்ளூடிக் தெரியாது. இந்த வசதி தனி இரு நபர்களுக்கு இடையிலான உரையாடலுக்கு மட்டுமே பொருந்தும். குரூப் சேட்டில் பகிரப்படும் செய்திகளுக்கு புளூ டிக் காட்டப்படுவது தொடரும்.

மொபைல் போட்டோக்களைப் பாதுகாக்க
இன்று பலருக்கும் பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டிய அத்தியாவசியப் பொருளாக மொபைல்போன் மாறியிருக்கிறது. ஏதேனும் சந்தர்ப்பத்தில் மொபைல் உடைந்துவிட்டாலோ, காணாமல் போக நேர்ந்தாலோ அதனால் ஏற்படும் மன உளைச்சல் கடுமையாக இருக்கும். போனின் விலை குறைவாக இருந்தாலும் அதில் வைத்திருக்கும் எண்கள், படங்கள் போன்ற விலைமதிக்க முடியாத, மீண்டும் கிடைக்காத டேட்டாக்களை பத்திரப்படுத்துவதுதான் சவாலான விஷயம்.உங்கள் போனில் அதி முக்கிய டேட்டா வைத்திருப்பவர்கள் இண்டெர்நெட் வசதியை பயன்படுத்தி அவற்றை ஆட்டோ பேக்கப் செய்து ஜிமெயில் டிரைவில் சேமிக்கலாம். கூகுள் போட்டோ ஆப்பில் செட்டிங்ஸ் பகுதியில் Backup & Sync என்பதைக் கிளிக் செய்து உங்கள் கூகுள் அக்கவுண்ட்டிற்கு ஆட்டோ பேக்கப் ஆன் செய்யவும். ஒரு அக்கவுண்டிற்கு 15 ஜிபி வரை இலவச இடம் வழங்கப்படுகிறது. கூடுதல் இடம் வேண்டும் என்றால் கட்டணம் செலுத்தவேண்டும். 

Leave a Reply

You must be logged in to post a comment.