புது தில்லி :

இன்று மோடி 1975ல் காங்கிரஸ் கொண்டு வந்த அவசரநிலை பிரகடனத்தை பற்றி விமர்சித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக தற்போது நடத்திவரும் அறிவிக்கப்படாத 4 வருட அவசரநிலைக்கு மன்னிப்பு கோருமா? என மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாமானிய மக்கள் அச்சுறுத்தப்படுவதும் மற்றும் விசாரணையின்றி கொல்லப்படுவதும் நடந்து வருகிறது. ஊடகங்கள் போன்ற நிறுவனங்கள் தவறுதலாக பயன்படுத்தப்படுகின்றன. பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இப்படி 4 வருடம் முடிந்த பின்பு பாஜக தற்போது 2019 நாடாளுமன்ற தேர்தல் மீதான பயத்தில் 1975 அவசரநிலையை கையில் எடுத்து வருவதாக அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: