இராசிபுரம் , ஜுன்.26-
வெண்ணந்தூர்  அருகே சேதம் அடைந்த பயணிகள் நிழல்கூடத்தை சீர்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துளளனர் .
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்கா வெண்ணந்தூர் அருகே நாச்சிபட்டியில் 500 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு பணிகளுக்காக ராசிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு வெளியூர் செல்லும் பொதுமக்கள் நாச்சிபட்டி கடைவீதியில் உள்ள  பேருந்து நிலையத்தில் உள்ள நிழல் கூட்டத்தினை பயன்படுத்தி வருகின்றனர் .இந்நிலையில் இந்த நிழல் கூடம் கடுமையாக சேதம் அடைந்து இருப்பதால் கடும் வெயிலில் காத்திருக்க வேண்டிய அவலநிலையுள்ளது. மேலும் நிழல் கூடம் கடுமையாக சேதம் அடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் நிழல்கூடத்தை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துமிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அரசு தலையிட்டு புதிதாக பயணிகள்  நிழல்கூடம் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது
நாச்சிபட்டி கடைவீதியில் பயணிகள் நிழல் கூடம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது இந்த நிழல் கூடத்தில் பயணிகள் அமர இருக்கைகள் இல்லை மேலும் நிழல்கூடம் கடுமையாக சேதம் அடைந்து பொதுமக்கள் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. இதனால்  பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் வெயிலில் அவதிகுள்ளாகின்றனர். இந்த நிழல்கூடம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் பலரும் இந்த நிழல்கூடத்தை வாகனங்கள் நிறுத்திமிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாச்சிபட்டியில் சேதம் அடைந்த பழைய நிழல் கூடத்தை அப்புறப்படுத்தி விட்டு புதிய பயணிகள் நிழல்கூடம் அமைத்து தர வேண்டும் என்றனர்.

Leave A Reply

%d bloggers like this: