தீக்கதிர்

விழுப்புரம் அருகே சாலை விபத்து – ஒருவர் பலி

விழுப்புரம்
விழுப்புரம் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.