கோவை,
கல்வி கட்டணத்தை செலுத்த கால அவகாசம் கேட்ட மாணவனுக்கு மாற்று சான்றிதழை கொடுத்தனுப்பிய தனியார் பள்ளியின் மீதுநடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை கோகுலம் காலனி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். தனியார் நிறுவனத்தில் கிளர்க்காகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் தீபக், வடவள்ளி முல்லை நகரில் உள்ள ஆர்பிஎம் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், குடும்பச் சூழல் காரணமாக இந்த வருடம் கல்வி கட்டணம் செலுத்த பள்ளி நிர்வாகத்திடம் கால அவகாசம் கேட்டுள்ளனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த பள்ளி நிர்வாகம். அம்மாணவனுக்கு வலுக்கட்டாயமாக மாற்றுச் சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதன்பின், முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து மாநகராட்சி பள்ளியில் படிக்க அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர். ஆனால், மாநகராட்சி பள்ளியிலும் சேர்த்துக்கொள்ள தலைமை ஆசிரியர் மறுப்பதால் தனது மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. எனவே, தனியார் பள்ளியின் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், தனது மகனை மாற்றுப்பள்ளியில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று மாணவன் தீபக் தனதுபெற்றோருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.